ஊர் : திருவீழிமிழலை,
திருவாரூர், தமிழ்நாடு
மூலவர் : வீழிநாதேஸ்வரர்,விழியழகர்,
நேத்திரார்ப்பணேசுவரர்
உற்சவர் : கல்யாணசுந்தரர்
தாயார் : சுந்தரகுசாம்பிகை
தல
விருட்சம் : வீழிச்செடி
தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம்
(முதலான 25 தீர்த்தங்கள்)
பெருமிழலைக்
குறும்பர் என்னும் பரமயோகி மிழலை
நாட்டுக் குறும்பூரில் வாழ்ந்தவர். குறும்பூர் இக்காலத்தில் திருக்குறுக்கைப் பள்ளி என்னும் பெயருடன்
விளங்குகிறது. நாற்பெருங்குரவர் என்று போற்றப்படுபவர்களில் ஒருவரான
சுந்தரமூர்த்தி நாயனாரையே தெய்வமாகக் கொண்டு வாழ்ந்தவர். அப்பூதி
அடிகள் அப்பர் பெருமானையே தெய்வமாகக்
கருதியது போன்றது இது.
விழி
என்னும் தமிழ்ப்பெயர் நேத்ரம் என்று வடமொழி
ஆக்கம் பெற்று இங்குள்ள இறைவன்
பெயர் அமைந்துள்ளது. திருவிழிமிழலை என்பது திருவீழிமிழலை ஆயிற்று.
தொழில்நுட்பம்
திருவலஞ்சுழி
பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி
கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி
தவிர்த்து பிற வகையிலான கட்டட
அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு.
இதன்மூலமாக இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி
பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும்
நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில்
கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.
சங்ககாலம்
சங்ககாலத்தில்
இதனைச் சூழ்ந்திருந்த நாடு மிழலை நாடு
என்னும் பெயருடன் திகழ்ந்தது. நீடூரைத்
தலைநகராகக் கொண்டு எவ்வி என்னும்
வள்ளல் இதனை ஆண்டுவந்தான்.
மிழலை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்.
இது இக்காலத்தில் திருவீழிமிழலை என்னும் பெயருடன் விளங்குகிறது.
கி.பி. ஏழாம்
நூற்றாண்டுத் தேவாரம் இவ்வூரின் சிவனைப்
போற்றுகிறது. இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில்
அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று
மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம்
குறிப்பிடுகிறது.
வழிபட்டோர் : திருமால்
(சக்கராயுதம் பெற), சுவேதகேது எனும்
மன்னன் (எமபயம் நீங்க), வசிட்டர்,
காமதேனு, ரதிதேவி, மனு
மகா
கும்பாபிஷேகம் 2013
2013 ஆம் ஆண்டு
11.09.2013 (ஆவணி 26) அன்று காலை மகா
கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஐயன்பேட்டை
சிவன் கோயில்
அப்பரும்,
சுந்தரரும் இறைவனாரிடமிருந்து பெற்ற படிக்காசுகளை மாற்றிப்
பொருள் பெற்ற கடைத்தெரு ஐயன்பேட்டை
என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. இங்கே படியளந்த நாயகி
உடனாய செட்டியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.
சங்ககாலத்தில்
இவ்வூர் சூழ்ந்த நாட்டை ஆண்ட
குறுநிலத் தலைவன் எவ்வி. இவன்
சிறந்த வள்ளல்.
பாண்டியன்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நாட்டை வென்று
தனதாக்கிக் கொண்டபின் அப்பகுதியில் இருந்த முத்தூறு பகுதியையும்
தனதாக்கிக்கொண்டான் என்கிறார் அவனது அவைக்களத் தலைமைப்
புலவர் மாங்குடி மருதனார் (=மாங்குடி
கிழார்).
புராண பெயர்(கள்) : பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தட்சிணகாசி, சண்மங்களத் தலம், சுவேத கானனம், ஆகாச நகரம், பனசாரண்யம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம்,திருவீழிமிழலை
No comments:
Post a Comment